மனைவிக்கும் கள்ளக் காதலனுக்கும் பிறந்த குழந்தை! தோண்டி எடுத்துக் கொடுத்த போலீஸ்! கையில் வாங்கி கணவன் செய்த நெகிழ்ச்சி செயல்!

மனைவியின் கள்ளக்காதலனுக்கு பிறந்த குழந்தை என்றும் பாராமல் கணவர் குழந்தைக்கு இறுதி சடங்கு செய்த சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் சேவூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சோலையம்மாள். இத்தம்பதியினருக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் 5-வது முறையாக கர்ப்பமான இவர் ஆரணி அரசு பொது மருத்துவமனையில் 14-ஆம் தேதியன்று குழந்தை பெற்றார். 

16-ஆம் தேதியன்று குழந்தையுடன் சோலையம்மாள் மாயமானார். மருத்துவ அதிகாரிகள் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சோலையம்மாவை வலைவீசி தேடி வந்தனர். சோலையம்மா சென்னையில் இருப்பதை அறிந்து கொண்ட காவல்துறையினர் அவரை தேடி கண்டுபிடித்து  விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தனக்கு குமாரின் சகோதரரான பாபு என்பவர்கள் தகாத உறவு இருந்ததாகவும், அந்த உறவின் மூலம் ஆகவே 5-வது குழந்தை பிறந்ததாகவும் கூறினார். குழந்தை பாபுவின் ஜாடையிலிருந்ததால் சோலையம்மாள் பயந்துபோனார். சோலையம்மாவும், பாபுவும் ஒருங்கிணைத்து குழந்தையை கொன்று விடு முடிவு செய்தனர். 

குழந்தையின் கழுத்தை நெரித்து முகத்தில் துணியை கட்டி சித்திரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். அதன்படி மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பிறகு, சேவூர் கிராமத்தில் உள்ள ஒரு முட்புதரில் வைத்து மூச்சு திணறடித்து கொலை செய்து அங்கேயே புதைத்தனர். பின்னர் பாபுவும் கைது செய்யப்பட்டார்.

உடனடியாக காவல்துறையினர் இருவரும் கூறிய இடத்திற்கு சென்று புதைந்திருந்த குழந்தையின் சடலத்தை மீட்டு எடுத்தனர். சேவூர் விவசாய நிலத்தில் குழந்தை புதைக்கப்பட்டிருந்தது. குழந்தையை கையில் வாங்கிய தந்தை குமார் கதறி அழுதார். 

பின்னர் குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு பொது மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகு குழந்தையின் உடலை குமாரிடம் மருத்துவர்கள் வழங்கினர். 

தன்னுடைய மனைவிக்கும் அண்ணனுக்குமிருந்த கள்ளத்தொடர்பினால் பிறந்த குழந்தை என்பதை பொருட்படுத்தாமல் குமார் குழந்தைக்கு இறுதி சடங்கு செய்தது அங்கிருந்தவர்களிடையே வரவேற்பை பெற்றது.

குழந்தை தனது மனைவிக்கும் அவளது கள்ளக்காதலனுக்கும் பிறந்ததாக கூறப்படும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல் போலீசாரிடம் இருந்து குழந்தையை பெற்று இறுதிச்சடங்கு செய்த கணவன் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தார்.