ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்த சடலம்! நேரில் பார்த்து அதிர்ந்து போன நண்பர்! புதுச்சேரி பரபரப்பு!

ரத்தவெள்ளத்தில் நிர்வாணமாக ஆணொருவர் இறந்து கிடந்த சம்பவமானது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரியில் பாலாஜி நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட மொட்டைதோப்பு எனுமிடத்தில் தத்துவசாமி என்பவர் தனிமையில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 2 பேர் தத்துவசாமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கும் தத்துவசாமிக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. வாக்குவாதங்களின் போது ஆத்திரமடைந்த இருவரும் தத்துவசாமியை அடித்து கொலை செய்துள்ளனர்.

நேற்று காலை இவருடைய வீடு நெடுநேரமாகவே மூடப்பட்டிருந்தது. இதனை சந்தேகித்த காவலாளி வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றாஅப்போது ரத்தவெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்த தத்துவசாமியின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உடனடியாக கோரிமேடு பகுதியில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியோடு தடயங்களை சேகரித்து வருகின்றனர். 

தத்துவசாமியின் வீட்டிற்குள் நேற்று முன்தினம் சென்ற இருவரின் அடையாளங்களை கண்டுபிடிப்பதில் காவல்துறையினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். 

இந்த சம்பவமானது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.