பிரியாணி செய்யணும்.. அதான் ஒரு ரெண்டு கிலோ பெரிய வெங்காயம்..! சிசிடிவி கேமரா மூலம் சிக்கிய கோமுட்டி திருடன்!

கடந்த 6 மாதங்களாக பிரியாணி சமைப்பதற்காக பல்பொருள் அங்காடியிலிருந்து வெங்காயங்கள் திருடப்பட்டு வந்த சம்பவமானது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மதுரை கோமதிபுரத்தில் புகழ்பெற்ற பல்பொருள் அங்காடி இயங்கி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் உரிமையாளர் இல்லாத நேரத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்து அரிசிக்கு 1500 ரூபாய் பணம் தர வேண்டும் என்று கடை ஊழியரிடம் கேட்டுள்ளார். ஊழியரும் உரிமையாளருக்கு போன் செய்துள்ளார். அரைத்தூக்கத்திலிருந்த உரிமையாளர் பணத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார்.

பிறகு கடைக்கு வந்து பார்த்தபோது பணத்தை பெற்று சென்றவர் வெங்காய உரிமையாளரல்ல என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை கண்காணித்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர் கடைக்குள் புகுந்து பிரியாணி அரிசி, 2 கிலோ வெங்காயம் முதலியவற்றை திருடியுள்ளார். பின்னர் கடையின் பெண் ஊழியரிடம் பேச்சு கொடுத்து 1500 ரூபாய் பணத்தையும் திருடி சென்றுள்ளார்.

உடனடியாக கடையின் உரிமையாளர் அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த மர்மநபர்  கொற்றை வீதி பகுதியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பது தெரியவந்துள்ளது. 

பின்னர் காவல்துறையினர் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கண்காணித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே கடையில் கூட்டம் நிரம்பி விடும் நேரங்களில் அப்துல் ரஹ்மான் கடைக்கு வந்து பொருட்களை திருடிச் செல்வதை வழக்கமாக கொண்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். 

அப்துல் ரஹ்மானின் உறவினர்கள் திருடி பொருள்களுக்கு ஈடான பணத்தை திருப்பி தந்து விடுவதாக சமரசம் பேசி வருகின்றனர். இந்த சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.