முஸ்லீம் பெண்ணை ஆசை ஆசையாக காதலித்த இந்து இளைஞனுக்கு ஏற்பட்ட பயங்கரம்! திருச்சி அதிர்ச்சி!

இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்த இளைஞர் மிரட்டல்களுக்கு அஞ்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எனது திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் சமயபுரம் அமைந்துள்ளது. சமயபுரத்தில் பிற்பட்ட அம்பலக்காரர் தெருவில் ரங்கராஜன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் விஜயா. இத்தம்பதியினருக்கு 3 மகன்கள் உள்ளனர். ரங்கராஜன் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். விஜயா மற்றும் இளைய மகன் தினேஷ் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

தினேஷ் டிப்ளமா படிப்பு முடித்துவிட்டு ஆந்திர ரயில்வே நிலையத்தில் ஒப்பந்ததார பணியாளராக பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஆந்திராவிலிருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாகவே நால்ரோடு பகுதியை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணொருவரை தினேஷ் காதலித்து வந்துள்ளார்.

இந்த காதல் விவகாரத்தை தெரிந்துகொண்ட பெண்ணின் தாயார் தன்னுடைய உறவினர்கள் 10 பேருடன் இணைந்து கொண்டு தினேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை தன்னுடைய மகளை காதலிப்பதை நிறுத்தி கொள்ளுமாறு பெண்ணின் தாயார் மிரட்டியுள்ளார். 

இதற்கு தினேஷ் ஒப்புக்கொள்ளவில்லை. உடனடியாக உறவினர்கள் மூலம் தன்னுடைய மகளை தினேஷின் வீட்டிற்கு பெண்ணின் தாயார் வரவழைத்துள்ளார். தினேஷின் கண்முன்னேயே அந்த பெண்ணை அவருடைய உறவினர்கள் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர். தன்னுடைய காதலி துன்பப்படுவது பொறுத்து கொள்ள இயலாது தினேஷ், நிச்சயமாக காதலை நிறுத்தி கொள்வதாக உறுதியளித்துள்ளார். 

பின்னர் அந்த பெண்ணின் உறவினர்கள் ஒரு பத்திரத்தில் காதலை முழித்துக் கொள்வதாகவும் இனிமேல் அந்த பெண்ணை சந்திக்க மாட்டேன் என்று தினேஷை எழுதவைத்து பெற்றுக்கொண்டனர். இனிமேல் நிச்சயமாக தன்னுடைய காதலியை சந்திக்க இயலாது என்று வாழ்ந்த தினேஷ் மன அழுத்தத்தில் தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடனடியாக தினேஷின் உறவினர்கள் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தினேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணின் தாய் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது சமயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.