நண்பரால் தன்னுடைய குடும்பம் சிதைந்து விட்டதாக பேருந்து ஓட்டுனர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் ஆடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நண்பன்னு நினைச்சி வீட்டுக்குள்ள விட்டேன்..! இப்போ என் குடும்பமே சிதைந்துவிட்டது..! கதறிய பஸ் டிரைவர் எடுத்த விபரீத முடிவு!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகநேரி எனுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள ராஜமன்னியபுரத்தை சேர்ந்தவர் மகேஷ். மகேஷின் வயது 43. தனியார் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக மகேஷ் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவியின் பெயர் அருணா. இத்தம்பதியினருக்கு மொத்தம் 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே கணவன் மனைவி இடையே கடுமையான தகராறுகள் ஏற்பட்டு வந்தன. இதனால் குடும்பத்தில் நிம்மதியின்றி இருவரும் தவித்து வந்தனர். இந்நிலையில், 15 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடுமையான தகராறு காரணமாக கணவன்-மனைவி பிரிந்தனர். மகேஷ் தன்னுடைய தாயாரான புஷ்பம் என்பவருடன் இணைந்து வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் குழந்தைகளை சந்தித்து வருவதாக தன்னுடைய தாயாரிடம் கூறிவிட்டு மகேஷ் வீட்டைவிட்டுப் புறப்பட்டுள்ளார். சீனந்தோப்பு காட்டுப்பகுதிக்கு அருகே சென்ற போது, மகேஷ் தன்னுடைய உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
உடனடியாக உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது, மகேஷ் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
புஷ்பம் இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணையை தொடங்கியவுடன், மகேஷ் வெளியிட்ட ஆடியோ பதிவாகவும் சமூக வலைதளங்களில் வைரலானது. " நானும் என்னுடைய மனைவியும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். ஆனால் என் நண்பர், செய்த செயல்கள் என்னை மீளாத்துயரில் தள்ளிவிட்டுள்ளது. இதனால் நான் வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
வீடியோவை பறிமுதல் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.