வயசு 38 ஆயிடுச்சி..! ஆனா குழந்தை பிறக்கவில்லையே..! ஏக்கத்தில் கணவன் எடுத்த முடிவு! தவிக்கும் மனைவி!

குழந்தை இல்லாத காரணத்தினால் விவசாயி ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி என்னுமிடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட முடச்சிக்காடு என்னும் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். அன்பழகனின் வயது 38. இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிவிட்டன. இருப்பினும் இவருக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். 

நேற்று தன்னுடைய வாயில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் இவருடைய உறவினர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அன்பழகனை பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் மேற்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் துருதிர்ஷ்டவசமாக சிகிச்சை  பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவமானது பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.