சாலை ஓரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் தந்தை! மகள்! மதுரையில் பரபரப்பு!

சாலையோரத்தில் மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தந்தையும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது திருமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் தோப்பூர் மேம்பாலம் அருகே வசித்து வருபவர் கிங்ஸ்டன் கிருபாகரன். இவருக்கும் இவர் மனைவிக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்னரே விவாகரத்து நடந்துள்ளது. இத்தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளனர். ‌ நீதிமன்ற உத்தரவுப்படி பெண் குழந்தை தந்தையிடம் வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் அந்த மேம்பாலத்தின் சாலையோரத்தில் இன்று காலை இவரும், இவருடைய மகளும் வாயில் நுரை தள்ளியவாறு உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். கிருபாகரன் தனது மகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அருகிலிருந்த தனியார் நிறுவனத்தின் காவலாளி இவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அப்பகுதி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தரையில் இருந்த மருந்து பாட்டிலை பரிசோதித்தபோது களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மேலும் அவர்களுடைய பைகளை ஆராய்ந்து பார்த்த போதும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. கிருபாகரனின் சட்டையிலிருந்து டிரைவிங் லைசன்ஸ் மற்றும் மகளின் புகைப்படத்தை வைத்து காவல்துறையினர் இவர்களின் அடையாளத்தை கண்டுபிடித்துள்ளனர். மேலும் கிருபாகரன் தன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சென்ற மாதம் 29-ஆம் தேதி இருவரும் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.இந்த சம்பவமானது திருமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.