வசமா மாட்டுனியா? புதருக்குள் கை விட்டவரின் கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு! நெஞ்சை பதற வைக்கும் திக் திக் நிமிடங்கள்..!

புதரை சுத்தம் செய்த பணியாளரின் கழுத்தில் மலைப்பாம்பு ஏறிய சம்பவமானது நெய்யாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி அருகே நெய்யாறு பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அணையை சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்திட்டத்தில் புவனசந்திரன் என்பவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, அணைப்பகுதியிலிருந்த புதருகளை சுத்தம் செய்து வந்தார். 

அப்போது யாரும் எதிர்பாராதபோது, அந்த மலைப்பாம்பு புவனசந்திரனின் கழுத்தில் ஏறிக்கொண்டது. அவருடைய கழுத்தில் ஏறிக்கொண்ட மலைப்பாம்பு அவரை இறுக்க தொடங்குகியது.

புவனசந்திரனின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, கழுத்திலிருந்த மலைப்பாம்பை மிகுந்த சிரமத்திற்கு பிறகு அகற்றினர்.உடனடியாக அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து சென்றனர்.

இந்த சம்பவமானது நெய்யாறு இப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.