கணவன் சரியில்லை..! மேட்ரிமோனி இளைஞனோடு சகவாசம்..! திருமணத்திற்கு முன்பே உல்லாசமாக இருந்த இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகிவிட்டு அவருடைய வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய நபரை கைது செய்திருப்பது காவல்நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை திருவொற்றியூரில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் ஏற்கனவே திருமணமானவர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். மீண்டும் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதன்படி மேட்ரிமோனி வலைத்தளங்களில் தன்னுடைய விவரங்களை கூறியுள்ளார்.

அப்போது இவருக்கு வியாசர்பாடி பகுதியை சேர்ந்த அஜ்மல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அஜ்மலின் கனிவான பேச்சு இந்த இளம்பெண் மயங்கினார். இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றித்திரிந்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருவரும் முடிவெடுத்தனர்.

திருமணத்திற்காக அந்தப்பெண் அஜ்மலிடம், 15 சவரன் நகை மற்றும் 2.5 லட்சம் ரொக்கம் முதலியவற்றை கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்ற பிறகு அஜ்மலின் நடவடிக்கையில் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆதலால் தான் கொடுத்த பணத்தை அந்தப்பெண் திரும்ப கேட்டுள்ளார். 

பணத்தை திரும்ப கேட்டதால் ஆத்திரமடைந்த அஜ்மல், நெருக்கமாக எடுத்துக்கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் தன்னுடைய குடும்பத்தினரிடம் நிகழ்ந்தவற்றை கூறியுள்ளார். உறவினர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருப்பிடத்தை கண்டறிந்தனர். அவரை பலமாக தாக்கி அவருடைய செல்போனில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அழிக்க முயன்றனர்.

அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. பல்வேறு பெண்களுடன் ஆஜ்மல் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்கள் கண்டுபிடித்தனர்‌. உடனடியாக அஜ்மலை காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் ஒப்படைத்தனர். 

காவல்துறையினர் அஜ்மலிடம் நடத்திய விசாரணையில், மேட்ரிமோனி வலைத்தளங்களின் மூலம் பல்வேறு பெண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணம் பறித்தது ஒப்புக்கொண்டுள்ளார் வாக்குமூலத்தின்படி காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் இந்த சம்பவமானது திருவொற்றியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.