வேலை வேணும்னா என் படுக்கைக்குவா! விருதுநகர் மன்மதராசாவுக்கு செம கவனிப்பு!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களை படுக்கைக்கு அழைத்த நபரை காவல்துறையினர் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இளைஞர் ஒருவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். அதாவது தன்னை அரசாங்க அதிகாரியாக பெண்களிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும் வேலை வாங்கி தருவதாக கூறி பல பெண்களிடம் கூறியுள்ளார். அவர்களிடமிருந்து பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றியுள்ளார்.

அதேபோன்று பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். பல்வேறு இடங்களுக்கு அவர்களை அலைக்கழித்துள்ளார். அதன்பிறகு படுக்கையறைக்கு வந்தால் தான் வேலை வாங்கித்தர இயலும் என்று கூறியுள்ளார். சிலரை புகைப்படம் எடுத்துக்கொண்டு மிரட்டியுள்ளார்.

இவரிடம் சிக்கிக்கொண்ட ஒரு பெண் தனக்கு நேர்ந்த இன்னல்களை தன் தோழியிடம் கூறியுள்ளார். உடனே அவர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். மர்ம நபரிடம் ஒப்புக்கொண்டதாக 2 பேரும் நடிக்க தொடங்கினர்.

அழகான பெண்கள் தன்னை அழைப்பதாக எண்னிய மோசடிக்காரர் அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். 2 பெண்கள் தங்கள் பகுதியில் உள்ள தெரிந்தவர்களிடம் இந்த தகவலை கூறியுள்ளனர். காவல்துறையினரும், அக்கம்பக்கத்தினரும் தயாராக இருந்தனர்.

அவளது வீட்டுக்கு அந்த நபர் வந்தவுடன், பொதுமக்கள் கடுமையாக விளாசியுள்ளனர். தர்மடி அடித்து பொதுமக்கள் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் காவலர்கள் அவர் மீது எந்த வழக்கையும் பதிவு செய்யாமல் இருந்துள்ளனர் என்று குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த சம்பவமானது விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.