கல்யாணம் செஞ்சார்..! ஆனால் அதன் பிறகு..? கழிப்பறைக்குள் சென்று குடிக்க கூடாததை குடித்த இளம் பெண்! திருப்பூர் அதிர்ச்சி!

வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்ட பெண்ணை கணவர் கைவிட்ட சம்பவமானது திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம் என்ற இடம் அமைந்துள்ளது. முத்துச்செல்வி என்ற 23 வயது பெண் வசித்து வந்தார். இதே பகுதியில் தீபக் என்ற 26 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இருவரும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால் ஆபத்தாகிவிடும் என்று எண்ணிய இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவர் வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த சில நாட்களாக தீபக் முத்துச்செல்வியிடம் சரிவர பேசவில்லை. பின்னர் தீபக் மற்றும் முத்துசெல்வியை முற்றிலுமாக தவிர்த்து  வந்துள்ளார். தீபக்கின் இத்தகைய செயல்பாடுகளால் அதிர்ச்சி அடைந்த முத்துச்செல்வி உடுமலை மற்றும் மடத்துக்குளம் காவல்நிலையங்களில் புகார் அளித்துள்ளார்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள சமூகநலத்துறை அலுவலகத்தில் இருவருக்கும் கவுன்சிலிங் செய்யப்பட்டது. தீபக் நிச்சயமாக முத்துச்செல்வி உடன் இணைந்து வாழ மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார். ஆனால் எப்படியாவது தன்னை தீபக்குடன் சேர்த்து வாழ வைக்க வேண்டும் என்று முத்துச்செல்வி மன்றாடியுள்ளார்.

தீபக்கின் முடிவை அறிந்து மனமுடைந்த முத்துச்செல்வி கலெக்டர் அலுவலகத்தின் கழிப்பறையில் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். உடனடியாக அங்கிருந்தோர் முத்துச்செல்வியை மீட்டெடுத்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முத்துச்செல்வியின் பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தின் வாயிலில், தங்களுடைய மகளை தீபக் ஏமாற்றியதாக கூறி கலெக்டர் அலுவலகத்தின் வாயிலில் தர்ணா செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவமானது மடத்துக்குளம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே 2 காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.