என்னை உல்லாசத்துக்கு மட்டும் அவன் யூஸ் பண்ணிகிட்டான்! டிவி நடிகை வெளியிட்ட பகீர் வீடியோ..?

காதலன் தன்னை ஏமாற்றியதால் விரக்தியடைந்த பிரபல சீரியல் நடிகை தற்கொலை செய்து  கொண்ட சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலத்தில் ஹசன் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட பெலூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சந்தனா. சந்தனாவின் வயது 29. இவர் கண்ணட தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமானவர். சமீபகாலங்களாக பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் தினேஷ் என்ற இளைஞரை கடந்த 5 வருடங்களாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.

சமீபகாலமாக காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன விரக்தியில் இருந்தார். திடீரென்று சென்ற மாதம் 28-ஆம் தேதியன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த சந்தனாவின் குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சந்தனாவின் மறைவை கேட்டு கன்னட சின்னத்திரை உலகம் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். 

அப்போது சந்தனாவின் செல்போனிலிருந்து ஒரு வீடியோவை காவல்துறையினர் கண்டறிந்தனர். அந்த அந்த வீடியோவில் தன்னுடைய மரணத்திற்கு காரணம் தினேஷ் தான் என்று தெளிவாக சந்தனா குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாலேயே தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

உடனடியாக காவல்துறையினர் தினேஷ் மற்றும் குடும்பத்தினருடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின் இறுதியில் இருவரும் மகிழ்ச்சியாக பல ஆண்டுகள் இருந்ததையும், திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்த வேளையில் தினேஷ் தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. 

அதுமட்டுமின்றி தினேஷ் சந்தனாவிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை திருப்பி செலுத்தாமல் தினேஷ் ஏமாற்றி வந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். உடனடியாக காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.