பயிற்சிக்கு சென்ற நர்ஸ்! சிகிச்சைக்கு வந்த இளைஞன்! எல்லை மீறிய உறவு! தாயுடன் கம்பி எண்ணும் பரிதாபம்!

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி நர்சிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவமானது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் மேலூர் என்னும் பகுதி அமைந்துள்ளது மேலூருக்கு உட்பட்ட திருவாதவூர் என்னும் இடத்தை சேர்ந்தவர் பெண் தல்லாகுளத்தில் உள்ள தனியார்  நர்சிங் கல்லூரியில் பயின்று வருகிறார்.

பயிற்சிக்காக புதூர் அருகேயுள்ள மாவடி என்னும் இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அந்த மருத்துவமனையில் உத்தர்புரத்தை சேர்ந்த ராமர் என்பவருடைய மகனான ராஜேஷ்வரன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

பயிற்சிக்கு சென்ற மாணவிக்கும் சிகிச்சைக்கு வந்த ராஜேஸ்வரனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 11-ஆம் தேதியன்று ராஜேஷ்வரன் மாணவியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

இதனை அறிந்து கொண்ட மாணவியின் பெற்றோர் உத்தர்புரத்திலுள்ள ராஜேஷ்வரன் வீட்டிற்கு சென்று தங்களுடைய பெண்ணை அனுப்பி வைக்குமாறு முறையிட்டுள்ளனர். இதற்கு ராஜேஷ்வரனின் வீட்டார் சம்மதிக்காததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 

இதனிடையே தங்கள் மகளை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக ராஜேஸ்வரனின் மீது மாணவியின் பெற்றோர் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். 

புகாரின் அடிப்படையில் ராஜேஷ்வரனை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.