19 வயது இளைஞனை காதலித்த 15 வயது சிறுமி கர்ப்பம்! கண்டுபிடித்த பெற்றோர்! பிறகு நேர்ந்த விபரீதம்!

பத்தாம் வகுப்பு மாணவியை கல்யாண ஆசை காட்டி  கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் வலைவீசி தேடி வரும் சம்பவமானது தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தர்மபுரி மாவட்டத்தில் அரூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அரூரை சேர்ந்தவர். இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வயது 15. அரூருக்கு அருகேயுள்ள கீழனூர் எனும் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி. இவருடைய வயது 19.  இருவருக்கும் இடையே கடந்த ஆறு மாதங்களாக நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

நெருக்கம் பின்னர் காதலாக மாறியது. வீராசாமி தன் லீலைகளை அந்தப் பெண்ணிடம் அரங்கேற்ற நினைத்தார். ஆசை வார்த்தை கூறி ஏமாற்றினார். பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தால் பற்றி கொள்ளும் என்பது போல வீராசாமி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். 

மூன்று மாதங்கள் கழித்து அந்த பெண்ணிற்கு உண்டாகிய மாற்றங்களை வைத்து அவருடைய உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

பெண்ணின் பெற்றோர்கள் விசாரித்ததில், அவர் வீராசாமியுடன் கொண்ட உறவினை பற்றி கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.வீராசாமி மீது போஸ்கோ வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது அரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.