திடீரென மயங்கிய நர்ஸ்! கர்ப்பமாக இருப்பதாக கூறிய டாக்டர்! அதிர்ச்சியில் உறைந்த தாய்! ஏன் தெரியுமா?

கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்த பின்னர் அந்தப் பெண்ணை ஏமாற்றிய சம்பவம் தேன்கனிக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே பஜ்ஜேபள்ளி என்னும் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 20 வயது மதிக்கத்தக்க மகள் உள்ளார். அவர் பெயர் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரும் அந்த மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்

படிகநாளும் என்னும் பகுதி தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது. இங்கு வசித்து வருபவர் சந்திரசேகர். இவரின் வயது 27. இவரும் மேற்கூறிய அரசு பொது மருத்துவமனையின் மருந்தகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் செல்விக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.

நாளுக்கு நாள் நெருக்கம் அதிகரித்து காதலாக மாறியது. காதல் பொழுதில் ஆசை வார்த்தைகளைக் கூறி காமத்தை அனுபவித்தார் சந்திரசேகர். பின்னர் எதிர்பாராவகையில் செல்வி கர்ப்பம் அடைந்தாள். இந்த செய்தியினை சந்திரசேகரிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் சந்திரசேகர் அதற்கு நான் பொறுப்பல்ல என்று செல்வியை கைகழுவிவிட்டார்.

தான் நம்பியவர் தன்னை இப்படி கைவிட்டு விட்டாரே என்ற சோகத்தில் செல்வி தூக்க மாத்திரைகளை அதிக அளவு சாப்பிட்டு விட்டார். மயங்கிக் கிடந்த செல்வியை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மருத்துவர்கள் அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதைப் அவரின் உறவினர்களிடம் தெரிவித்தனர்.

அதிர்ச்சி அடைந்த அவர்கள் செல்வியிடம் விசாரித்தனர். அப்போது செல்வி தான் சந்திரசேகரிடம் ஏமாந்ததை கூறினார். பின்னர் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சந்திரசேகரின் இல்லத்திற்கு சென்றனர். ஆனால் அதற்குள்ளேயே சந்திரசேகர் தலைமறைவாகிவிட்டார். தலைமறைவான சந்திரசேகரை ஒரு தனிக்குழு அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.