வெளிநாட்டு மோகம்! துபாய் மைனரிடம் அடுத்தடுத்து ஏமாந்த 4 பெண்கள்! பரிதவிக்கும் குடும்பம்!

4 பெண்களை திருமணம் செய்த பிறகு அவர்களை ஏமாற்றி நடன அழகிகளை ஒருவர் தேடிச்சென்றிருக்கும் சம்பவமானது ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கோமலாதேவி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கங்காதரன் துபாய் நாட்டில்தொழில் நிறுவனத்தை தொடங்குவதற்காக மனைவியிடம் நகை மற்றும் பணத்தை வாங்கி சென்றுள்ளார். 

சில காலங்களிலேயே தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய தொடங்கியது. இதனால் தன் மனைவியை துபாயில் தன்னுடன் அழைத்து சென்றார். அங்கு வாழ்ந்த கோமலாதேவி சில மாதங்களிலேயே தன் கணவரின் நடவடிக்கைகளில் மாற்றங்களை கண்டுள்ளார்.

தன் கணவர் இரவு நேரங்களில் வேலை இருப்பதாக கூறி பப்களுக்கு சென்று நடன அழகிகளுடன் கூத்தாடி வந்துள்ளார். இதனை கண்டுபிடித்து கோமலாதேவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கங்காதரன் தன் மனைவியுடன் இந்தியாவிற்கு திரும்பி, பின்னர் மீண்டும் துபாய் செல்வதாக பிளான் செய்தார்.

திடீரென்று ஒருநாள் இரவு கங்காதரன் அசந்து உறங்கி கொண்டிருந்த போது, அவருடைய மொபைலுக்கு கவிதா என்று ஒரு பெண் கால் செய்துள்ளார். அதன் பின்னர் கோமலாதேவியின் வாழ்க்கை இருண்டு போக தொடங்கியது. ஒரு பெண் அந்த போனில் கங்கா தனது மனைவி என்று அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். மேலும் தான் கர்ப்பமாக உள்ளதாக கூறியுள்ளார். அன்றிரவு அவருடைய மொபைலை சோதித்தபோது பல திடுக்கிடும் தகவல்களை கோமலாதேவி அறிந்துள்ளார்.

கவிதாவை தவிர யமுனா என்ற பெண்ணையும் அவர் 3-வது முறையாக திருமணம் செய்து கொண்டதை அறிந்துள்ளார். இந்நிலையில் கோமலாதேவி தன் கணவரை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் கங்காதரன் தான் திருந்தியதாக கூறியதையடுத்து வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.

சில நாட்களிலேயே கங்காதரன் 4-வது திருமணம் செய்து கொண்டதை கண்டறிந்துள்ளார். அவர் தீபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இறுதியாக காவல் நிலையத்தில் அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்து தன் கணவர் மீது மோசடி வழக்கை பதிவு செய்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கங்காதரன் "நான் அவன் இல்லை" படத்தில் வரும் கதாநாயகனை போன்று பெண்களை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றவுடன் ஏமாற்றி சென்றுவிடுவதாக ஒப்பு கொண்டுள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.