முதலில் கவிதா..! பிறகு விதுபாலா..! அப்புறம் மீனாட்சி..! 3 பெண்களை திருமணம் செய்து ஜமாய்த்த மதுரைக்கார மாப்பிள்ளை! அதிர்ச்சி ரிப்போர்ட்!

மனைவிக்கு தெரியாமல் ஆண் ஒருவர் 3 திருமணங்கள் செய்த சம்பவமானது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரையில் கே.புதூர் அழகர்நகர் என்னும் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கூடல்நகர் என்னும் பகுதியில் கவிதா என்ற பெண்ணுடன் 2008-ஆம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது செந்தில்குமாருக்கு 25 பவுன் தங்க நகைகள் சீதனமாக வழங்கப்பட்டது. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். 

இந்நிலையில் அதிகமாக வரதட்சணை கேட்டால்தான் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ தொடங்கினர். இந்நிலையில் 2013-ஆம் ஆண்டில் விதுபாலா என்ற பெண்ணை  திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில மாதங்களிலேயே அவரையும் பிரிந்து வாழ்ந்தார். 

இந்நிலையில், 3-வதாக அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலையம்பட்டியை சேர்ந்த மீனாட்சி என்ற 32 இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். போலியான விவாகரத்து பத்திரிக்கையை காண்பித்து தன்னுடைய  குடும்பத்தினரின் உதவியுடன் அந்த திருமணத்தை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மூடப்பட்டுள்ள அனைத்தையும் ஒரு புகார் மனுவாக எழுதி கவிதா கூடலூர் காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார். வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இந்த சம்பவமானது மதுரை கூடல்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.