ஓசி கேக் வெட்டுவதற்காக வாள் எடுக்கும் வம்ச வாரிசுகள் செய்த கெத்தான வேலை..! கொத்தாக போலீசிடம் சிக்கி சிதைந்த பின்னணி! கமுதி பரபரப்பு!

வாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய இளைஞர் மற்றும் அவரது நண்பர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் மணலூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உண்மையான வாள் வைத்துக்கொண்டு வாள் சண்டை போடுவது போன்ற வீடியோ ஒன்று எடுத்துள்ளார். வீடியோ எடுத்தது மட்டுமின்றி அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோவானது டிக்டாக்கில் வைரலாகி வந்தது. 

கிராமத்தில் சில நாட்களுக்கு முன்னர் அதே இளைஞருக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றுள்ளது. அப்போது அந்த இளைஞருடன் கிட்டத்தட்ட 20 பேர் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். அப்போது அந்த இளைஞர் டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோவிலிருந்த வாளை வைத்து கேக் வெட்டுவது போன்று வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. வீடியோ எடுக்கப்பட்ட போது அருகில் இருந்த சிலர் காவல்துறையினருக்கு தெரிந்தால் சிக்கலாகிவிடும் என்று எச்சரித்துள்ளனர்.

ஆனால் அனைத்து எச்சரிக்கைகளையும் மீறி சம்பந்தப்பட்ட இளைஞர் கேக்கை வாள்வைத்து வெட்டி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 2 வீடியோக்களும் ராமநாதபுரம் காவல் ஆய்வாளரின் சிறப்பு செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடனடியாக அவர் மணலூர் காவல்துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

மணலூர் காவல்துறையினர் வீடியோவில் சம்பந்தப்பட்ட தேடிப்பிடித்து கைது செய்தனர். அதுமட்டுமின்றி இளைஞரை சுற்றி நின்றுகொண்டிருந்த 9 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 10 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை ஒரு நாள் முழுவதும் காவல்துறை காவலில் வைத்திருந்தனர்.

பின்னர் கொரோனா காலம் என்பதால் அவர்களை சிறையில் அடைக்காமல் காவல்துறை ஜாமீனில் எச்சரித்து விடுவித்தனர். இந்த சம்பவமானது மணலூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.