ஒன்லி மாணவிகளுக்கு மட்டும் தான்! கோவை பரோட்டா கடையில் விற்பனை செய்யப்படும் விவகாரமான மேட்டர்!

பரோட்டா கடையில் மாணவிகளுக்கு கஞ்சா விற்ற குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமானது கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் அரிசிபாளையம் என்னுமிடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ரவிபிரசாத் என்பவர் பரோட்டா கடை நடத்தி வந்தார். இப்பகுதியில் கல்லூரியொன்று அமைந்துள்ளது. 

இந்த கடையிலிருந்து மாணவிகளுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதனை உறுதி செய்வதற்காக காவல்துறையினர் மாற்றி வேடத்தில் அங்கு சென்றனர்.

பெண் போலீஸ் ஒருவர் மாணவி போன்ற வேடமிட்டு கடைக்கு சென்று கஞ்சா கேட்டுள்ளார். அப்போது ரவிபிரசாத் யாருக்கும் தெரியாமல் எடுத்து கொடுக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். 

காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்த 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவமானது கோயம்புத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.