டென்னிஸ் வீராங்கனை கற்பழிப்பு! சென்னை இளைஞர் அதிரடி கைது! சிக்க வைத்த செல்போன்!

இளம் டென்னிஸ் வீராங்கனையை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் அவரை மிரட்டி வரும் சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை கீழ்ப்பாக்கத்தில்  ராமநாதன் தெருவில் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த தெருவில் காசிம் முகமது என்பவர் வாழ்ந்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் நவீத் முகமது. இவருடைய வயது 21. சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் சென்னையை சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கனை ஒருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே 2 மாதங்களுக்கு முன்னர் டென்னிஸ் வீராங்கனை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் நெருங்கி பழகி வந்த நவீத் முகமது தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், அந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளதாகவும், அதனை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாக மிரட்டி வருவதாகவும் கூறியிருந்தார்.

உடனடியாக தனிப்படை அமைத்து நவீத் முகமதை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வலைவீசி தேட தொடங்கினர். 2 மாதங்களாக அவரைத் தேடி வந்த நிலையில் நேற்று செங்குன்றம் பகுதியில் வைத்து நவீத் முகமதை கைது செய்தனர்‌.

சிறையில் அடைத்துள்ள காவல்துறையினர் அவர் மீது பாலியல் பலாத்காரம், பெண்களை அடித்துத் துன்புறுத்துதல், மானபங்கம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.