பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி வழிபடும் திருச்சி விவசாயி...! நெகிழ வைக்கும் காரணம்!

தமிழ்நாட்டு விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டியுள்ள சம்பவமானது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் துறையூர் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட எரகுடி எனும் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். சங்கரின் வயது 50. இவருக்கு பானுமதி(40) என்ற மனைவியும் சதீஷ்குமார், சூர்யா எனும் 2 மகன்களும் உள்ளனர். இவர் சிறு வயதிலிருந்தே பிரதமர் மோடி மீது அதிக ஈர்ப்பு கொண்டவர். இவர் ஒரு விவசாயி ஆவார். இவர் அப்பகுதியில் விவசாய சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை உறுப்பினராகவும் சேர்த்து கொண்டுள்ளார்.

இவருக்கு சிறு வயதிலிருந்தே பிரதமர் மோடிக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. சமீபகாலமாக விவசாயத்தில் பணம் நிறைய கிடைக்காததால் தன்னுடைய ஆசையை அவரால் நிறைவேற்ற இயலாமல் இருந்தது. ஆனால் தற்போது அவருக்கு விவசாயத்தில் நல்ல வருவாய் கிடைத்துள்ளதால் கோவில் கட்டி முடித்துள்ளார்.

8 மாதங்களுக்கு முன்னர் சங்கர் கோவில் கட்ட தொடங்கியுள்ளார். யாருடைய உதவியுமின்றி கோவிலை வெற்றிகரமாக தற்போது கட்டி முடித்துள்ளார். மேலும், மூத்த தலைவர்களை கொண்டு கோவிலை திறக்க வேண்டும் என்பதை ஆசையாக கொண்டுள்ளார். பிரதமர் மோடியை அரசியல் தலைவர் என்பதை காட்டிலும், ஒரு நல்ல மனிதராக கருதி அவர் மீது ஈர்ப்பு கொண்டதாக சங்கர் கூறியுள்ளார்.

இந்த செய்தியானது திருச்சி மாவட்டத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.