இளம் பெண்ணை வைத்து செக்ஸ் போட்டோ சூட்! தஞ்சை இளைஞரின் விபரீத செயல்!

பணத்தகராறில் இளம்பெண்ணை ஆபாச படம் எடுக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்திருப்பது தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே மகேந்திரகுளம் என்னும் பகுதி அமைந்துள்ளது. முத்தரசன் என்பவர் இங்கு வசித்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் சூரஜ். இவருடைய வயது 25. இவர் தஞ்சை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடன் அளிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

தஞ்சை பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்தவர் வளர்மதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சுரஜிடம் ஏற்கனவே ஒரு முறை கடன் வாங்கியிருந்தார். குடும்ப சூழ்நிலைகளால் நேற்று முன்தினம் வளர்மதி சூரஜிடம் மீண்டும் கடன் கேட்டுள்ளார். 

சூரஜ், வளர்மதியை மொபட்டில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார். வளர்மதி வந்து பணத்தை கேட்டபோது, அவரை ஏமாற்றி வல்லம் பகுதியில் வைத்து பணத்தை தருவதாக கூறியுள்ளார். இருவரும் ஒரே மொபட்டில் வல்லத்திற்கு புறப்பட்டனர். செல்லும் வழியிலேயே வளர்மதியிடம் தான் வண்டி ஓட்டுவதாக கூறியுள்ளார். 

கூறியபடி வல்லத்திற்கு செல்லாமல், ஆர்.எஸ். பதி பகுதியில் உள்ள தோப்பிற்கு அழைத்து சென்றார். தங்க வைத்து சுமதியுடன் தான் கடன் தருவதாகவும், அதற்காக தன்னுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படத்தை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை வளர்மதி மறுக்க, அருகிலிருந்த கட்டையால் வளர்மதியை சூரஜ் தாக்கியுள்ளார்.

சூரஜிடம் இருந்து தப்பிப்பதற்கு வளர்மதி தஞ்சை- திருச்சி நெடுஞ்சாலைக்கு ஓடி வந்துள்ளார். அங்கும் சூரஜ் வளர்மதியை மிரட்டிக்கொண்டு இருந்தார். இதனைக்கண்ட பொதுமக்கள் இருவரையும் விசாரித்து, காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 

அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் வல்லம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் வளர்மதி அளித்த புகாரின் அடிப்படையில் சூரஜை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவமானது தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.