வேகமாக வந்த ரயில்..! அசால்ட்டாக தண்டவாளத்தில் பாய்ந்த இளைஞன்..! பதை பதைக்க வைக்கும் வீடியோ உள்ளே!

மும்பையில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென்று ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


மும்பையில் குர்லா ரயில் நிலையம் அமைந்துள்ளது ‌. இந்த ரயில் நிலையத்தில் பீகாரை சேர்ந்த சேதுராம் என்ற பயணி ஒருவர் ரயிலில் ஏறுவதற்காக நடைமேடையில் நின்று கொண்டிருக்கிறார். அப்போது ரயிலானது நடை மேடையை நோக்கி வந்துகொண்டிருந்தது.

அங்கே நின்று கொண்டிருந்த சேதுராம் தண்டவாளத்தில் குதித்து தலைவைத்து படுத்துக் கொண்டார். இதனையடுத்து வேகமாக வந்த அந்த ரயில் அந்த நபரின் மீது ஏறியது. இதனால் சேதுராம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை பார்த்த மற்ற பயணிகள் பயத்தில் அலறி அடித்து ஓடினர்.

அறிந்து வந்த போலீசார் இந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.