பட்டப்பகலில் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு இளைஞனால் ஏற்பட்ட விபரீத அனுபவம்! கட்டி வைத்து தோலை உரித்த ஊர் மக்கள்!

திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லைகள் அளித்தவரை கம்பத்தில் கட்டி அடித்த சம்பவமானது மதுராந்தகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுராந்தகத்தில் நேதம்பாக்கம் என்னுமிடம் அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆறுமுகத்தின் வீட்டுக்கு அருகில் திருமணமான பெண் ஒருவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்தப்பெண் மீது ஆறுமுகத்துக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. தன்னுடைய காம இச்சைகளை நிறைவேற்றி கொள்வதற்காக அந்த பெண்ணின் வீட்டிற்கு சம்பவத்தன்று ஆறுமுகம் நுழைந்துள்ளார். 

அந்த பெண் எதிர்பாராத சமயத்தில் வீட்டினுள் நுழைந்த ஆறுமுகம் அந்த பெண்ணிடம் சில்மிஷங்களில் ஈடுபட தொடங்கியுள்ளார். மேலும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட தொடங்கினார். பெண்ணின் கூச்சலை கேட்டு வீட்டருகே இருந்த பொதுமக்கள் விரைந்து வந்தனர்.

பாலியல் தொல்லை கொடுத்து கொண்டிருந்த ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்தனர். ஊர் நடுப்பகுதியில் உள்ள பெரிய கம்பத்தில் ஆறுமுகத்தை கட்டி வைத்தனர். ஊர் பெண்கள் ஒவ்வொருவராக வந்து பிரம்பு மற்றும் இதர பொருட்களின் மூலம் அடித்து துவைத்தனர்.

சம்பவம் அறிந்த சித்தாவூர் காவல்துறையினர் அங்கு சென்று ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது மதுராந்தகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.