பட்டப்பகல்! நட்ட நடுரோடு! நண்பனை சரமாரியாக வெட்டிய நபர்! அமைதியாக வீடியோ எடுத்த மக்கள்! புதுக்கோட்டை திகில்!

மதுபோதையில் இளைஞர் ஒருவர் தன் நண்பரை அரிவாளால் தாக்கியுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் காந்தி நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் ரவி. இப்பகுதிக்கு அருகே உள்ள இம்மணம்பட்டியில் ரவியின் நண்பரான சுந்தரம் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் அதீத மதுப்பழக்கம் உள்ளது. இந்நிலையில் நண்பர்கள் தினத்தன்று வரும் பல இடங்கள் சுற்றி மாலை நேரத்தில் மது அருந்த தொடங்கினர்.

மதுபோதையில் இருந்தபோது இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட தொடங்கியது. வாய்த்தகராறு முற்றி போய் கைகலப்பு வரை சென்றது. ஆத்திரமடைந்த சுந்தரம் தன் அரிவாளால் ரவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரவி படுகாயம் அடைந்துள்ளார்.

சுந்தரத்தை அக்கம் பக்கத்தினர் தடுக்க முயன்றனர். ஆனால் அவர் அருகில் வந்த பொதுமக்களையும் அரிவாளால் தாக்க முற்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுந்தரம் மீது கற்களை வீசி அப்பகுதியிலிருந்து விரட்டினர். கற்கள் தாக்கியதில் சுந்தரமும் பலத்த காயமடைந்தார்.

இதனை தடுக்கமால் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும் சிலரோ செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர் பின்னர் ஒரு வழியாக ஒரு பெண்மணி இந்த கொடுமையை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த சுந்தரம் மற்றும் ரவியை அருகிலிருந்த அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பொதுமக்களுக்கு இடையூறு அளித்ததற்காக சுந்தரம் மற்றும் ரவி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது புதுக்கோட்டை காந்திநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.