ஹரியானா மாநிலத்தில் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்த பெண்ணொருவரை முகத்தில் குத்தி தப்பியோடிய குற்றவாளியை அப்பகுதியில் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சுங்கச் சாவடியில் இளம் பெண் முகத்தில் டிரைவர் செய்த சம்பவம்! வைரல் வீடியோ!
குருகிராம் என்னும் பகுதி ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு இருக்கும் கெராகி டவுலா சுங்கச்சாவடியில் இன்று காலை சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. கார் வாகனத்தில் வந்த ஒருவருக்கும் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த பெண் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நீண்ட நேரமாகியும் வாக்குவாதம் முடியவில்லை. ஆத்திரமடைந்த வாகன ஓட்டுநர், பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்.
பணியில் இருந்த பிற பணியாளர்கள் அவரை பிடிக்க முற்பட்ட போதிலும் அவர்களால் இயலவில்லை. அடிவாங்கிய பணியாளரின் முகம் சற்று வீங்கியது. வலியில் துடித்த அந்த பெண் அழுத காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
அந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் குற்றவாளியை gurugram பகுதி காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். https://twitter.com/ANI/status/1141946715898908672?s=19