ஆசையாக வளர்த்த பூனையை அடித்துத்தின்ற பக்கத்து வீட்டுக்காரர் - காவல் நிலையத்தில் ருசிகர வழக்கு

ஆசையாக வளர்த்த பூனை குட்டியை பக்கத்து வீட்டுக்காரர் கொலை செய்துவிட்டதாக இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது கோட்டயம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோட்டயம் பகுதியில் காந்திநகர் என்னும் இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் சஞ்சு ஸ்டீபன். இவர் ஆசை ஆசையாக 2 பூனைக்குட்டிகளை வளர்த்து வந்தார். ஒரு குட்டியின் பெயர் குஞ்சாயி.‌ மற்றொன்றின் பெயர் சுசானா. 

இந்நிலையில் நேற்று ஸ்டீபன் அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் மீது காந்தி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதாவது தன்னுடைய 2 பூனைக்குட்டிகளை கொலை செய்ததாக புகார் அளித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னால் குஞ்சாயிக்கு உடம்பில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் வீடு திரும்பி உள்ளது. 2 நாட்கள் உயிருக்கு போராடிய நிலையில் இருந்து இறந்து போனது.

மேலும் தன்னுடைய வீட்டு பகுதியிலேயே பூனையை ஸ்டீபன் புதைத்துள்ளார். காவல்துறையினர் இது சம்பந்தமாக வழக்கு நடத்தி விசாரித்து வருகின்றனர். ஸ்டீபன் இறந்த பூனைக்கு கண்டிப்பாக பிரேத பரிசோதனை செய்து வைக்க வேண்டும் என்று காவல்துறையினரை வலியுறுத்தி வருகிறார்.

குஞ்சாயி இறந்து போன 2 நாட்களிலேயே சுசானா காணாமல் போயுள்ளது. இந்நிலையில் சுசானாவையும் அதே பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக்கொலை செய்து தின்றுவிட்டதாகவும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

ஸ்டீபன் பாராளுமன்ற உறுப்பினரான மேனகா காந்தியிடமும் புகார் அளித்துள்ளார். மேலும் விலங்கினம் உயிர் காக்கும் சங்கத்திலும் இது குறித்து புகார் எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவமானது கோட்டயம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.