ஓசில சிகரெட் கொடுடி..! அண்ணே ஏன் இப்டி பண்றீங்க! பேக்கரியில் இருந்த பெண்ணுக்கு ரவுடியால் ஏற்பட்ட விபரீத அனுபவம்!

ஓசி சிகரெட் கேட்டு கடைக்கார பெண்ணை ஆபாசமாக திட்டியவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


முத்தனம்பட்டியில் அமைந்திருக்கும் பேக்கரி ஒன்றில் நாகலட்சுமி என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது வெயிலடிச்சான்பட்டி என்னும் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் அந்த பேக்கரிக்கு வந்துள்ளார்.

உடனடியாக அவர் நாகலக்ஷ்மியை நோக்கி இலவசமாக சிகரெட் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு நாகலக்ஷ்மி மறுப்பு தெரிவித்தவுடன் நாகலட்சுமியை நோக்கி கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் அவரை நோக்கி ஆபாசமாகவும் திட்டியுள்ளார். 

அப்போது அந்த கடையில் அமர்ந்து கொண்டு இருவர், தேநீர் அறிந்துகொண்டும், மிக்சர் சாப்பிட்டு கொண்டும் இருந்துள்ளது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.