பணம் அனுப்பி ஆபாச புகைப்படம் கேட்ட இளைஞன்! குறும்புக்காரப் பெண் அனுப்பியது என்ன தெரியுமா? வைரல் புகைப்படம்

இளம்பெண் ஒருவரிடம் நிர்வாண புகைப்படங்களை கேட்ட நபரை அவர் வறுத்தெடுத்த சம்பவமானது டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ எனும் நகரம் அமைந்துள்ளது. இங்கு லேஷ் என்ற பெண் வசித்து வருகிறார். ட்விட்டரில் லேஷை பின்பற்றும் ஒருவர் அவருக்கு 30 பவுண்டுகள் அனுப்பியுள்ளார்.

இதனால் சற்று அதிர்ந்த லேஷ் தனக்கு ஏன் பணம் அனுப்பியுள்ளீர்கள் என்று அந்த இளைஞரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர் உன்னுடைய நிர்வாண புகைப்படம் வேண்டும் என்று பதிலளித்திருந்தார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத லேஷ் அந்த இளைஞரிடம் பணத்தை அனுப்ப கூறியுள்ளார். பின்னர் அவருக்கு ஒரு ஆச்சரியம் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். கூறியவாறு அந்த இளைஞர் 30 பவுண்டுகளை லேஷுக்கு அனுப்பியுள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்டார் லேஷ் நேராக சிற்றுண்டி உண்பதற்காக சென்றுள்ளார். சிற்றுண்டி சாப்பிடுவது போன்று அவர் புகைப்படங்களை எடுத்து கொண்டார். பின்னர் அந்த புகைப்படங்களை தன்னிடம் நிர்வாண புகைப்படங்களை கேட்ட நபருக்கு அனுப்பியுள்ளார்.

இதனை தற்போது வரை 9,400 ட்விட்டர் பயனர்கள் கண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் லேஷின் திறமையை பாராட்டியுள்ளனர். மேலும் இந்த காலத்தில் ஆண்களின் புத்தி ஏன் இவ்வாறு செல்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த சம்பவமானது ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.