ஒரே கட்டிலில் ஆணுடன் படுக்க வைக்கப்பட்ட பெண்! அரசு மருத்துவமனையின் அவலம்!

ஒரே படுக்கையில் ஆண் மற்றும் பெண் நோயாளிகளை மருத்துவர் ஒருவர் படுக்க வைத்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


மத்திய பிரதேச மாநிலத்தில் தலைநகர் இந்தூர். இங்கு மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனை அமைந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்திலேயே மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக பெயர் பெற்றது.

அந்த மருத்துவமனையில் 12 நாட்களுக்கு முன்னர் எலும்பு முறிவின் காரணமாக சங்கீதா என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மத்திய பிரதேச மாநிலத்தின் காந்த்வா மாவட்டத்தை சேர்ந்தவர். நேற்று இவருக்கு எக்ஸ்-ரே எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. படுக்கைகள் குறைவாக இருந்ததால் பகுதி நேர மருத்துவர் ஒருவர் சங்கீதாவை மற்றொரு ஆண் நோயாளியுடன் ஒரே படுக்கையில் சேர்த்து படுக்க வைத்துள்ளார்.

இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரான தர்மேந்திரிடம் விசாரணை நடத்தியபோது, "மிகவும் வருத்தமாக இருந்தது. சிகிச்சை நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்தோம். நாங்கள் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கபட்டோம்" என்று வருந்தினார். 

அந்த புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. மருத்துவமனையின் டீன் ஆன மருத்துவர் தாக்கூர் பணியிலிருந்த பகுதிநேர மருத்துவர் மற்றும் வார்ட்பாயை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவமானது இந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.