ஊரடங்கு! சொந்த ஊருக்கு செல்ல சாப்பாடு இல்லாமல் நடந்த கர்ப்பிணி! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

மத்திய அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் தன் கணவருடன் சுமார் 100 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று பின்னர் அங்கிருந்த உள்ளூர் வாசிகளால் மீட்கப்பட்டு போதிய உதவிகளை பெற்றுக் கொண்டனர்.


உள்ளூர்வாசிகளான நவீன் குமார் மற்றும் ரவீந்திரா ஆகியோர் மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு பின்னர் பணமும் இல்லாமல் உணவும் இல்லாமல் தவித்து வருகின்றனர். 8 மாத கர்ப்பிணி பெண்ணான ரவீந்திர மற்றும் அவரது கணவர் இருவரும் இணைந்து தங்களது சொந்த ஊருக்கு நடை பாதையில் சென்று விடலாம் என்று திட்டமிட்டு உள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து இரண்டு நாட்கள் நடந்து , உண்ண உணவும் இன்றி 100 கிலோமீட்டருக்கு மேலாக பயணித்துள்ளனர்.

இவ்வாறாக இருவரும் இணைந்து கடந்த சனிக்கிழமை அன்று மீரட் பேருந்து நிலையத்தை அடைந்து உள்ளனர். பேருந்து நிறுத்தத்திற்கு வந்த அவர்கள் இருவரை யாஸ்மின் மற்றும் அவரது கணவர் இருவரும் உற்று கவனித்து உள்ளனர் . பின்னர் அவர்கள் இருவரின் பிரச்சினையைக் குறித்து கேட்டறிந்து உள்ளனர். 

இதையடுத்து அவர்களைப் பற்றிய தகவலை நவுச்சண்டி காவல் நிலைய துணை சப் இன்ஸ்பெக்டர் பிரேம்பால் சிங்குக்கு தகவல் கொடுத்தனர். அதுமட்டுமில்லாமல் சஹரன்பூரிலிருந்து புலந்த்ஷாருக்குச் செல்லும் பயணத்தின் எஞ்சிய பகுதியை கடக்க தேவையான வசதிகளையும் அவர்களுக்கு செய்து தரப்பட்டது. 

எட்டு மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் மீரட்டில் ரொக்கமும் ஆம்புலன்சும் வழங்கப்பட்டன. புலாந்த்ஷர் சியானாவில் உள்ள அமர்கர் கிராமத்தில் அவர்களை இறக்கிவிட ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ததோடு, தம்பதியினருக்கு உணவு மற்றும் சில பணத்தை வழங்கியதாக நவுச்சந்தி காவல் நிலைய பொறுப்பாளர் அசுதோஷ் குமார் தெரிவித்தார்.

கொரானா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாட்டு மக்கள் அனைவரும் பலவித இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் இந்த கர்ப்பிணிப் பெண்ணின் இந்த சோகமான கதை என்பது குறிப்பிடத்தக்கது.