ஓடும் காரில் முதலில் மனைவி! பிறகு மச்சினிச்சி! குழந்தைகள் முன்னிலையில் கணவன் அரங்கேற்றிய பகீர் சம்பவம்!

2 குழந்தைகளின் கண்முன்னேயே கணவர், மனைவி மற்றும் மைத்துனியை கொலை செய்த சம்பவமானது பிகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விஷ்ணுகுமார் சர்மா என்ற 33 வயது நபர் ராணுவ வீரர் ஆவார். இவர் குஜராத் மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டிருந்தார். இவருடைய மனைவியின் பெயர் தமானி. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மைத்துனியின் பெயர் டிம்பிள். 

2 மாதங்களுக்கு முன்னர் விஷ்ணுகுமார் சர்மாவுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நோய் தாக்கியதிலிருந்தே அவருடைய நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிகிச்சைக்கு குடும்பத்தினர் அனைவரும் பாட்னாவுக்கு சென்றுகொண்டிருந்தனர்.

2 குழந்தைகளும் தமானியின் தந்தை மடியில் முன்னிருக்கைகளில் அமர்ந்து கொண்டிருந்தனர். அப்போது கணவன் மனைவியிடையே திடீரென்று சண்டை சச்சரவுகள் ஏற்பட தொடங்கியுள்ள. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. வாக்குவாதங்கள் முற்றிப்போய் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விஷ்ணுகுமார், தன் மனைவி மற்றும் மைத்துனியை நொடிப்பொழுதில் சுட்டு கொன்றுள்ளார். மேலும் தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடனடியாக தமானியின் தந்தை வாகனத்திலிருந்து இறங்கி காப்பாற்றுமாறு உதவி கேட்டுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர். 

அங்கு அவர்களுக்கு கிடைத்த விஷ்ணுகுமாரின் அடையாள அட்டை மற்றும் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 3 பேரின் உடல்களையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.