பெண் ஆசிரியையுடன் ஆசிரியர் ஒருவர் உல்லாசமாக இருக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேனி ஸ்கூல் வகுப்பறையில் பெண் ஆசிரியையுடன் உல்லாசம்! செல்ஃபி வீடியோ! ஆண் ஆசிரியரின் முகம் சுழிக்க வைக்கும் செயல்!
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் எனுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகேயுள்ள ராயப்பன்பட்டி எனும் இடத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
ராயப்பன்பட்டிக்கு அருகே அமைந்துள்ள ராமசாமி நாயக்கன்பட்டியில் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. மேற்கூறப்பட்ட ஆசிரியருக்கும் இந்து தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை கும் கடந்த சில மாதங்களாக நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது இருவரும் மிகவும் நெருக்கமாக பல இடங்களுக்கு சுற்றித்திரிந்தனர்.
சம்பவம் அறிந்த ராயப்பன்பட்டி மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் சில நாட்களுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தது. அதன்பின்னர் அந்த ஆசிரியர் ராமசாமி நாயக்கன்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு சென்றுள்ளார்.
அங்கு குழந்தைகள் யாரும் பள்ளியில் இல்லாத நேரத்தில் அந்த ஆசிரியையுடன் மிகவும் நெருக்கமாக செல்பி மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனக்கு நெருங்கிய ஆசிரியர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பரப்பியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தேனி மற்றும் உத்தமபாளையம் பகுதிகளில் உள்ள வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து மாவட்ட கல்வி ஆய்வாளர் கூறுகையில், "இந்த வீடியோ உண்மையானதா என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. உண்மையாக இருக்கும் பட்சத்தில் தகுந்த ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறினார்.
இந்த சம்பவமானது தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.