ஆண்கள் தினமும் சாப்பிட வேண்டியது வெண்டைக்காய் - சிறுநீரகத்தில் கல் வராமல் தடுக்க செவ்வாழை - வாய்ப்புண்ணா? தேங்காய் கடிங்க

ஞாபகசக்தி அதிகரிப்பதற்கு வெண்டைக்காய் உதவுமென்று கிராமங்களில் சாதாரணமாக சொல்வார்கள். மற்ற மருத்துவ குணங்களைப் பார்க்கலாம்.

வெண்டையை நறுக்கும்போது வெளிவரும் பிசுபிசு திரவம்தான் மிகவும் சத்து நிரம்பியது. இதுவே புத்திசாலித்தனம் ஞாபகசக்திக்கு உதவுகிறது.

·         வெண்டையில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் தேவையில்லாத கெட்ட கொழுப்பை அகற்றி இதயத்துக்கு பேருதவி புரிகிறது.

·         வெண்டை சாப்பிடால் மலச்சிக்கல், குடல்புண் ஆறுகிறது. இத்துடன் வாய் துர்நாற்றத்தையும் தீர்த்துவைக்கிறது.

·         நிறைய வெண்டை சாப்பிடும் ஆண்களுக்கு, தாம்பத்திய வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும், ஆண்மை குறைபாடு நீங்குகிறது.

 

சிறுநீரகத்தில் கல் வராமல் தடுக்க வேண்டுமா? செவ்வாழை சாப்பிடுங்க

வாழைப்பழங்கள் எல்லாமே மனிதனுக்கு நன்மை செய்கிறது என்றாலும் செவ்வாழை கூடுதல் மருத்துவத் தன்மை கொண்டதாகும்.

·         செவ்வாழையில் இருக்கும் பொட்டாசியம் காரணமாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

·         பீட்டா கரோட்டீன் நிரம்பியிருப்பதால் கண் நோய்களைக் குணமாக்குகிறது, குறிப்பாக மாலைக்கண் நோய் நீங்கும்.

·         தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் பலம்பெறுகிறது. நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

·         கல்லீரல் வீக்கம், பல் நோய்கள், தோல் நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மையும் செவ்வாழைக்கு இருக்கிறது.


வாய்ப்புண்ணா? தேங்காய் கடிங்க

கேரளா, இலங்கையில் தேங்காய் அதிகம் பயன்படுத்தினாலும் நம்  மக்களுக்கு தேங்காய் மீது பயம் உண்டு. இந்த பயம் தேவையா?

·         தேங்காய் நார்ச்சத்து உள்ளது என்பதால் அப்படியே பயன்படுத்தலாம். பால் எடுத்துப் பயன்படுத்தினால் கொழுப்புத்தன்மை அதிகரிக்கும்.

·         வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்கு தேங்காய் அருமருந்தாக பயன்படுகிறது. அப்படியே கடித்துத்தின்றால் போதும்.

·         எடை தேறாத குழந்தைக்கு தேங்காய் கொடுத்துவந்தால் விரைவில் பலன் கிட்டும். பூசினவாக்கில் தெம்பாக குழந்தை இருக்கும்.

·         சிறுநீரக கோளாறு வராமல்  தடுத்து  உடலுக்கு மினுமினுப்பை தருகிறது. நீரிழிவு, கொழுப்புசத்து நிரம்பியவர்கள் மட்டும் தவிர்ப்பது நலம்.

 

More Recent News