ஆண் கழுதையுடன் உறவு கொண்ட பெண் வரிக்குதிரை..! பிறகு அதற்கு பிறந்த குட்டி..! என்ன தெரியுமா?

கென்யாவில் ஆண் கழுதைக்கும் மற்றும் பெண் வரிக்குதிரைக்கும் இடையில் ஏற்பட்ட கலப்பினத்தால் பிறந்த உயிரினத்திற்கு ஸோங்கி என்று பெயரிடப்பட்டுள்ளது


சாவோ கிழக்கு தேசிய பூங்காவிலிருந்து இருந்து கடந்த மே மாதம் பெண் வரிகுதிரை ஒன்று தப்பி ஓடிவிட்டது. அந்த பெண்வரிக்குதிரை அருகில் இருந்த பகுதிக்குள் நுழைந்து மறைந்து கொண்டது. அப்பொழுது அது ஒரு ஆண் கழுதையுடன் கலப்பினத்தில் ஈடுபட்டுள்ளது.பின்னர் சில நாட்கள் கழித்து அந்த வரிக்குதிரையை வனவிலங்கு அறக்கட்டளையை சேர்ந்த நபர்கள் மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.

ஆண் கழுதையால் கர்ப்பமாகபட்ட அந்த பெண் வரிக்குதிரை தற்போது தனது குட்டியை ஈன்று உள்ளது. அந்த வரி குதிரைக்கு பிறந்த குட்டியானது பார்ப்பதற்கு கழுதையும், வரிக்குதிரையும் கலந்துள்ளது போல் காட்சி அளிக்கிறது. கழுதையும் வரிகுதிரையும் சேர்ந்து கலப்பினத்தில் ஈடுபட்டதால் இந்த உயிரினத்திற்கு அந்த வனவிலங்கு அறக்கட்டளை ஸோங்கி என பெயரிட்டுள்ளது. இதை புகைப்படமாக எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் அந்த அறக்கட்டளை பதிவேற்றி உள்ளது. தற்போது ஸோங்கியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அறக்கட்டளை பகிர்ந்த புகைப்படங்களில் ஸோங்கி அதனுடைய தாயின் பின்னால் ஓடும் அழகிய காட்சிகள் தெரிகிறது. மேலும் அதனுடைய கால்களில் வரி குதிரையைப் போல் அழகிய வரிகளும் இடம்பெற்றுள்ளன. அதாவது அந்த ஸோங்கியின் உடலின் மேற்பரப்பில் கழுதையை போன்றும் கால்களில் வரிகுதிறை போன்றும் காட்சியளிக்கிறது. 

இதனை அறக்கட்டளை பதிவேற்றம் செய்த ஒரு சில மணி நேரங்களிலேயே, பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.