அந்த நடிகருக்கு எங்கேயோ மச்சம் இருக்கு? மலையாள கரையில் இருந்து ஒப்பந்தமான இளம் நடிகை!

கடந்த 2018 ஆம் ஆண்டில் சினிமாத்துறையில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட திரைப்படம் "பரியேறும் பெருமாள்" ஆகும்.


இந்த திரைப்படத்தில் நடிகர் ரஞ்சித் நடித்திருந்தார் . இந்த திரைப்படம் ஆனது அறிமுக இயக்குனரான மாரிசெல்வராஜ் இயக்கத்தின் மற்றும் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டது. சமூக நலனை கருதி இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இது ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டு சமூகவலைத்தளங்களில் பெரிதாகவும் பேசப்பட்ட திரைப்படமாகும். தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருடைய புதிய திரைப்படத்திற்கு " கர்ணன் " என பெயரிட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். இதைக்கேட்ட தனுஷின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் என்றுதான் கூறவேண்டும்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக மலையாள திரைப்பட நடிகை ரஜிஷா விஜயன் என்பவர் நடிக்கப் போவதாக உறுதிப்படுத்தப்படாத பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடிகை கடந்த 2016 ஆம் ஆண்டு "அனுரக கரிக்கின் இல்லம் " எனும் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக திரைத்துறையில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இதேபோல் தனுஷின் புதிய திரைப்படமான "அசுரன் " திரைப்படத்தையும் கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.