மகளின் திருமணத்திற்கு கூட செல்லாத பிரபல காமெடி நடிகர்! காரணம் இதுதான்..!

மலையாள சினிமாவில் 90களின் முன்னணி நடிகராக வலம் வந்த காமெடி நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார். தன்னுடைய சொந்த மகளின் திருமணத்திற்கு செல்லாதது குறித்து அவரது ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.


மலையாள சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் இவர் , கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார். இவருடைய மகளின் திருமணம் சமீபத்தில் நிச்சயிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடிகர் ஜெகதி ஸ்ரீகுமாரின் மகள் ஸ்ரீலட்சுமி திருமணம் நடைபெற்றது. ஸ்ரீ லட்சுமியின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் தன்னுடைய சொந்த தந்தையான நடிகர் ஜெகதிஸ்ரீகுமார் கலந்து கொள்ளாதது பலரின் மத்தியில் கேள்வியை எழுப்பியது.

தற்போது இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் கடந்த 1980 ஆம் ஆண்டு ஷோபா என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இவர் கலா என்ற வேறு ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டிருந்திருக்கிறார்.

இந்நிலையில் கலாவுடன் தனக்கு திருமணம் நடைபெற்றதை பற்றி கடந்த 2012 ஆம் ஆண்டு வெளி உலகிற்கு கூறியிருக்கிறார். நடிகர் ஜெகதி ஸ்ரீகுமாருக்கும் கலாவுக்கும் பிறந்த மகள் தான் ஸ்ரீலட்சுமி. அதாவது இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகளின் திருமணத்திற்கு தான் நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் செல்லவில்லை. 

இரண்டாவது மனைவியின் மகள் என்பதால்தான் நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் ஸ்ரீலட்சுமி திருமணத்திற்கு செல்லவில்லை என பலரும் கூறி வருகின்றனர்.