மலச்சிக்கல் தீர்க்கும் வெந்தயம்..நம் அன்றாட உணவில் நிச்சயம் இருக்கவேண்டிய காரணங்கள் இதோ..

சமையலுக்கு சுவை சேர்ப்பதற்குப் பயன்படும் வெந்தயத்தில் மனிதர்கள் நலமுடன் வாழ்வதற்கான பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.


  • சிறிதளவு நீரில் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து பகலில் அந்த நீரை பருகினால் உடல் சூடு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் அகன்றுவிடும்.
  • வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் பொடியாக்கி மோரில் கலந்து தினமும் குடித்துவந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
  • வெந்தயத்தை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் அஜீரணம், வயிற்றுக்கோளாறு நீங்கும். ரத்தவோட்டமும் சீராகும்.

வெந்தயத்துக்கு தாய்ப்பாலை பெருக்கும் தன்மையும் தீக்காயத்தை ஆற்றும் வல்லமையும் உண்டு.