34 வயது நடிகருடன் தனித் தீவில் விடுமுறையை கழிக்கும் 45 வயது நடிகை! வைரல் போட்டோ!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான மலைக்கா அரோரா மற்றும் அர்ஜுன் கபூர் ஆகிய இருவரும் தங்களுடைய விடுமுறை நாட்களை கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்.


இந்தி சினிமாவின் சீனியர் நடிகையான மலைக்கா அரோரா அர்ஜுன் கபூருடன் தன்னுடைய விடுமுறை நாட்களை கொண்டாடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.

இருப்பினும் அவர்கள் இருவரும் எந்த இடத்தில் தங்களுடைய விடுமுறை நாட்களை கொண்டாடி வருகின்றனர் என்பதை பற்றி இன்னும் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இவர்கள் இருவரும் ஒன்றாக விமான நிலையத்தில் சென்ற போது எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் தங்களுடைய விடுமுறை நாட்களை தான் கோலாகலமாக கொண்டாட சென்றுள்ளனர் என்பது தற்போது தான் தெரிகிறது .

அந்த புகைபடத்தில் நடிகை மலைக்கா அரோரா வெள்ளை நிற கிராப் டாப் மற்றும் ஜீன்ஸ் அணிந்து இருந்தார். இந்த புகைப்படத்தை அழகான மலைகள் சூழ்ந்துள்ள இடத்தில் எடுத்திருந்தார் . இதே இடத்தில் அர்ஜூன் கபூரும் தனியாக நின்று இருக்கும் விதமாக புகைப்படங்களை எடுத்து அவரும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மலைக்கா அரோரா மற்றும் அர்ஜுன் கபூர் ஆகியோர் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு முறையினை பற்றி ரசிகர்கள் பலவிதமாக பேசும் இந்நேரத்தில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வந்துகொண்டிருக்கின்றன. மேலும் இதனை பார்த்த நெட்டிசன்கள் பலவித கமெண்ட்களை அளித்த வண்ணம் உள்ளனர் .