விரசமான உடையில் மகனுடன் உலா! பிரபல நடிகையின் புகைப்படம் வைரல்! கரித்து கொட்டும் ரசிகர்கள்!

பாலிவுட் நடிகை மலைக்க அரோரா பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தனது மகனுடன் வந்த போது கவர்ச்சி உடையில் வந்த விவகாரம் இணையதளத்தில் கண்டனக் கணைகளை எதிர்கொண்டுள்ளது.


17 ஆண்டுகளுக்கு மும் அர்பாஸ்கானைத் திருமணம் செய்துகொண்ட மலைக்க அரோரா பின்னர் அர்ஜுன் கபூருடன் இணைத்துப் பேசப்பட்டார். வழக்கமான சமூக சூழல் சார்ந்த நாகரிக உணர்வுகளுக்கோ, ஒழுக்க நெறிகளுக்கோ கட்டுப்படாத கேடுகேட்ட வெட்டி டாம்பீகம் சார்ந்த  சினிமா கலாச்சாரத்தில் ஊறிப் போனவர் மலைக்க அரோரா.

வழக்கமான பாலிவுட் நடிகைகளைப் போன்று 40க்கு மேற்பட்ட வயதிலும் கவர்ச்சி உடைகளையே அணிவது வழக்கம். இந்நிலையில் சோனம் கபூரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மலைக்க அரோரா வெள்ளை நிறத்தில் உடலின் கவர்ச்சியான பாகங்களை எடுத்துக்காட்டும் விதமான விரசமான ஆடையில் வந்தார்.

இதில் கொடுமை என்னவென்றால், இளைஞனான அவரது மகன்  அர்ஹான் கானு உடன் வந்தது தான். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானநிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறைந்தபட்சம் பெற்ற குழந்தைகள் முன்னிலையிலாவது நாகரிக உடைகளை அணிந்து வரலாம் என்ற ரீதியில் இணையதளத்தில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் சோனம் கபூர் பிறந்த நாள் விழாவை தனது வழக்கமான ஸ்டையில் கொண்டாடிவிட்டு மீண்டும் மகனுடன் புறப்பட்டு சென்றார் மலைக்கா. ஆனால் அவர் மகன் தான் பாவம்அவரை மலைக்காவின் காதலன் என்கிற ரீதியில் சிலர் ட்விட்டரில் தகவல்களை பரப்பிவிட அது சர்ச்சையாகியுள்ளது.