33 வயது நடிகர் மீது எனக்கு செம மோகம்! 45 வயது நடிகை வெளியிட்ட ஹாட் தகவல்!

மும்பை: ''எனக்கு அர்ஜூன் கபூரை ரொம்ப பிடிச்சிருக்கு,'' என்று பாலிவுட் நடிகை மலைகா அரோரா சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார்.


ஷாரூக் கான் நடிப்பில், மணி ரத்னம் இயக்கத்தில், வெளியான உயிரே படம் பலராலும் மறக்க முடியாத ஒன்றாகும். அதில் வரும், தய்ய தய்ய தய்யா தய்யா என்ற ரயில் பாடல் மிகப் பிரபலமானது.

ஷாரூக் கானுடன், ஒரு இளம்பெண் ஜோடி சேர்ந்து அந்த பாடலில் ஓடும் ரயிலில் நடனமாடியிருப்பார். அவர்தான் மலைகா அரோரா. தற்போது, 45 வயதாகும் மலைகா அரோரா அர்பாஸ் கான் என்ற சக நடிகரை திருமணம் செய்திருந்தார்.

அவர்களுக்கு, அர்ஹான் என்ற 16 வயது மகனும் உள்ளார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, மலைகாவும், அர்பாஸ் கானும் விவாகரத்து வாங்கி, பிரிந்துவிட்டனர். 

இதையடுத்து, மீண்டும் சினிமா நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ள மலைகா அரோரா, மற்றொரு நடிகரான அர்ஜூன் கபூருடன்  நெருங்கி பழக தொடங்கியுள்ளார். இவர்கள் 2 பேரும் டேட்டிங் போகும் அளவுக்கு நெருங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதை நிரூபிக்கும் வகையில், ஆகாஷ் அம்பானி திருமணத்தில் பங்கேற்பதற்காக, மலைகாவும், அர்ஜூனும் ஒரே காரில் மும்பை விமான நிலையம் சென்று அங்கிருந்து, ஸ்விட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றனர். அதேபோல, திரும்பி வரும்போதும் ஒரே காரில் வீடு திரும்பினர்.

இதற்கிடையே, ஸ்டார் வேர்ல்ட் இந்தியா டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ள  காஃபி வித் கரண் 6 நிகழ்ச்சியின் இந்த வார எபிசோடில், மலைகா அரோரா, மல்லிகா துவா, வீர் தாஸ், கிரான் கெர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளனர். அதன் டிரெய்லர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

அதில், ''அர்ஜூன் கபூரை எப்படி பார்த்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,'' என்று மலைகா அரோரா நெகிழ்ச்சியாகக் கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலமாக, இவர்களின் காதல் வெளி உலகுக்கு உறுதிபட தெரியவந்துள்ளதாக, சினிமா ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு, வரும் ஞாயிறன்று ஒளிபரப்பாகும் காஃபி வித் கரண் 6 எபிசோடை பாருங்கள். அதேசமயம், பொது வெளியில் தங்களுக்கு இடையே உள்ள பழக்கம் பற்றி இருவருமே எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியின் ஹைலைட் என்ன என்றால், நடிகை மலாய்க்காவுக்கு வயது 45. ஆனால் அவர் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வரும் அர்ஜூன் கபூருக்கு வயது வெறும் 33 தான்.

45 வயதான உங்களக்கு 33 வயதான நடிகர் மீது மோகம் ஏன் என்கிற கேள்விக்கு தான் தனக்கு எப்படி பார்த்தாலும் அர்ஜூன் கபூரை பிடித்திருப்பதாக மலாய்க்கா கூறியுள்ளார்.