ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் மக்கள்நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு! காரணம் இதுதான்!

ஒரிசா மாநிலத்தின் முதல்வராக நவீன் பட்நாயக் கை நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் தலைவரான கமலஹாசன் சந்தித்துள்ளார்.


நவீன் பட்நாயக் புவனேஸ்வரில் அமைந்திருக்கும் தன்னுடைய இல்லத்தில் வசித்து வருகிறார். மக்கள் நீதி மையம் கட்சி தலைவரான கமல்ஹாசன் நவீன் பட்நாயக் அவர்களின் இல்லத்தில் சந்தித்தார்.

அரசியல் சார்ந்து மற்றும் அரசியல் சாராத பல விஷயங்களைப் பற்றி இருவரும் கலந்துரையாடியதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நடிகர் கமல்ஹாசன் நவீன் பட்நாயக்கிற்கு அசோகச் சக்கரத்தை பரிசாக வழங்குகிறார். 

இவர்கள் இருவரின் சந்திப்பு முடிவடைந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அடிப்படையில், இது அரசியல் தலைவரிடம் அறிவுரை கேட்கும் வகையிலான உரையாடல்தான்.

 நான் அவரிடம் அரசியல் சார்ந்த பல கேள்விகளைக் கேட்டு அதற்கு தகுந்த பதிலையும் அவர் எனக்கு வழங்கினார் அரசியலில் எனக்கு தேவையான ஆலோசனைகளையும் அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அரசியலை உற்று நோக்குவதால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று அவர் கூறினார்.

மேலும் கமலஹாசனுக்கு ஒடிசாவில் உள்ள செஞ்சூரியன் பல்கலைக் கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. அந்தப் பட்டத்தை, முதல்வர் நவீன் பட்நாயக் வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.