பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக கமல்ஹாசன் வெளியிட்ட கோரிக்கை.!

இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்திக்கவுள்ள மோடி அவர்களுக்கு இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை பற்றி எடுத்துரைக்க வேண்டும் என மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ராஜபக்ஷே இந்தியா வந்துள்ளதை அடுத்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவரை பார்த்து பேச உள்ளார். இவர்கள் இருவரின் சந்திப்பின்போது பல விதமான ஆலோசனைகள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ராஜபக்சேவை சந்திக்க உள்ள பாரத பிரதமருக்கு மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் புதிய கோரிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கோரிக்கை அறிக்கையில் இலங்கை உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும் எனவும் அவர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் ராணுவ படையினர் குவிக்கப்பட்டு இருப்பதைப் பற்றி பேச வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். 

அதுமட்டுமில்லாமல் கடலில் இறங்கி மீன்பிடிக்கும் தமிழர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்வதை பற்றியும் இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் மோடி அவர்கள் பேச வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார். இதன் மூலம் அங்கு வாழும் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் நம்மால் முடிந்த பாதுகாப்பை உறுதி செய்ய இயலும் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.