மக்க நீதி மய்யம் கட்சியுடன் திடீர் கூட்டணி! ஒரே ஒரு கட்சிக்கு 4 தொகுதிகளை ஒதுக்கினார் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்த ஒரே ஒரு கட்சிக்கு 4 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார் கமல்ஹாசன்.


சென்னையில் மக்கள் நீதி மய்யம் - இந்திய குடியரசு கட்சி இடையே நேற்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது என்று இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செகு தமிழரசன் அறிவித்தார்.

அதன்படி இன்று சென்னையில் இரண்டு கட்சிகளுக்கு இடையிலான தொகுதி ஒதுக்கீடு உடன்பாடு எட்டப்பட்டது. அதன் படி மக்களவை தேர்தலில் இந்திய குடியரசு கட்சிக்கு ஒரு தொகுதியும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் 3 தொகுதிகளையும் கமல் ஒதுக்கியுள்ளார்.

மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் இந்திய குடியரசுக் கட்சியின் வேட்பாளர்கள் மக்கள் நீதிமய்யத்தின் டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என்று செகு தமிழரசன் அறிவித்துள்ளார். காங்கிரஸ், திமுக என்று கமல் கூட்டணியை எதிர்பார்த்து இருந்தார்.

கடைசியில் இந்திய குடியரசு கட்சியுடன் கூட்டணி அமைக்கும் நிலைக்கு கமல் தள்ளப்பட்டுள்ளார்.