பொள்ளாச்சி வீடியோக்கள் வெளியாவது எப்படி! சற்று முன் கமல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


2 பெண்களின் தந்தையாக கேட்கிறேன் என்ன செய்து அரசின் தவறுக்கு பரிகாரம் செய்யப்போகிறீர்கள்?புகார் தர வரக்கூடாது என்று வீடியோ வெளியிட்டு அரசு மிட்டுகிறார்கள். ஜெ. வழியில் ஆட்சி செய்யும் அரசு பொள்ளாச்சி விவகாரத்தில் எப்படி மெத்தனமாக இருக்கமுடியும்?

வீடியோக்களை குற்றவாளிகள் அழித்துவிட்டதாக கூறும் நிலையில் எப்படி வெளியானது? மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் மட்டுமின்றி காப்பாற்ற துடிப்போருக்கும் தண்டனை உண்டு. 

புகார் கொடுத்த பெண்ணின் பெயர் வெளியிடப்பட்டதற்கு கண்டனம். போராட்டம் நடத்த வந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்படுகின்றனர். பொள்ளாச்சி கொடூரச் சம்பவத்திற்கு தமிழக முதல்வராக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

அதாவது பொள்ளாச்சி வீடியோக்களை குற்றவாளிகள் தரப்பே வெளியிடுவதாக கமல் கூறியுள்ளார்.