வீட்டில் இருந்த அத்தனை ஆண்களும்..! ஒருவன் மாறி ஒருவன்..! தஞ்சையில் இளம்பெண்ணுக்கு காரில் வைத்து அரங்கேறிய பகீர் சம்பவம்!

வீட்டு வேலை செய்து வந்த வெளிமாநில பெண்ணை மர்ம நபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமானது தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி என்று இடம் அமைந்துள்ளது. இங்கு காலை 10 மணியளவில் கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. அந்தக் காரில் இருந்து பெண்ணொருவர் வேகமாக தள்ளிவிடப்பட்டார். அந்த பெண்ணை கீழே தள்ளியவுடன் கார் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுவிட்டது. பெண் வலியால் துடித்துக் கொண்டிருந்ததை பார்த்த மாதர் சங்க பெண்கள் சிலர் அவரை மீட்டெடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அந்த பெண் தற்போது உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணிடம் மருத்துவமனை நிர்வாகிகள் உரையாட முயன்றபோது, அவர் இந்தியில் பேசியுள்ளார். அப்போது இந்தி தெரிந்தவர்களை அழைத்து விசாரித்தபோது, கடந்த 5 மாதங்களாக தான் ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக முகம் தெரியாத நபர்கள் தன்னை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறியுள்ளார். மயக்க நிலையில் இருந்த தன்னை தூக்கி காரில் போட்டு நடுவீதியில் கீழே தள்ளிவிட்டு சென்றனர் என்றும் கூறினார். அந்த பெண்ணின் பையில் கிட்டத்தட்ட 50,000 ரூபாய் இருந்துள்ளது. அந்த பெண்ணின் ஆடைகள் கிழிந்து படுகாயமடைந்த நிலையில் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி அவருடைய உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.