இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகும் இலங்கை பேட்டிங் ஜாம்பவான்! கோலி - சாஸ்திரி ஜோடிக்கு ஆப்பு ரெடி!

உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.


உலகக்கோப்பையில் கோஹ்லி மற்றும் ரவி சாஸ்த்ரி எடுத்த தவறான முடிவுகளே இந்திய அணி தோல்வி அடைய காரணம் என்று எதிர்ப்பு வலுத்து வருகிறது.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக  இருந்து வரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்து விட்ட நிலையில் புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது . 

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு பல்வேறு நாட்டைச் சார்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விண்ணப்பித்து வருகின்றனர் . 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிரிஷ்டன்  மீண்டும் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு  விண்ணப்பித்துள்ளார் . மேலும் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே யாவும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார் . மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர்  ஷேவாக்கும் இந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவை  தலைமையாகக் கொண்ட ஒரு குழுதான் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்று முடிவு செய்யும் என்று பிசிசிஐ  கூறியுள்ளது  . ஆனால் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனேவுக்கு தான்  இந்திய அணியின் பயிற்சியாளராக வாய்ப்புகள் அதிகம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு மஹேலா ஜெயவர்த்தனே இங்கிலாந்து அணியின் பேட்டிங் கோச்சாக இருந்து வந்தவர் ஆவார். இவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 2ம் வாரத்திற்குள்  இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்று அதிகாரபூர்வமாக தெரிந்துவிடும்  என்பது குறிப்பிடத்தக்கது.