மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் முதல் நாள் பணியில் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஏழை குடும்பத்தின் முதல் டாக்டராகி சாதனை! ஆனால் பணியில் சேர்ந்த முதல் நாள் அரங்கேறிய பயங்கரம்!

பெங்களூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மன்யகுமார் 26, இவர் தனது மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு பணி ஆணைக்காக காத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மே மாதம் அவருக்கு மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்ற ஆணை வந்தது.
இந்நிலையில் மகாராஷ்டிரா சென்ற அவர் அங்குள்ள அரசு மருத்துவமனை விடுதியில் தங்கி உதவி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவரது பயிற்சி காலம் முடிந்த நிலையில் அவருக்கு புற்றுநோயாளிகள் பிரிவில் மருத்துவராக பணி நியமனம் கிடைத்தது. மற்றும் அவரது திறமையை பார்த்து அங்கிருந்த மருத்துவர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இன்று அவர் பணியில் சேரும் முதல் நாள் என்பதால் புதிய மருத்துவரை வரவேற்க அவரது நண்பர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது நீண்ட நேரமாகியும் மன்யகுமார் மருத்துவமனைக்கு வராத நிலையில் அவரது நண்பர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை பார்த்து அதிர்ந்தனர்.
இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.