திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்த இளைஞன்! 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு ஏமாற்றிய வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட முதலியார் சத்திரம், கெம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரது மகன் சந்தோஷ் என்கிற யாபேஸ் (வயது 23). இவன்  கடந்த 2018 ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து விட்டுகம்பி நீட்டிவிட்டான்.

இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு மீதான விசாரணை இன்று முடிவடைந்தது.

இதனை தொடர்ந்து மகிளா நீதிமன்ற நீதிபதி மகிழேந்தி சந்தோசுக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து சந்தோஷ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.