மதுரை பூங்காவில் சில்மிஷம்! 15 காதல் ஜோடிகளை கொத்தாக அள்ளிச் சென்ற போலீஸ்!

மதுரை ராஜாஜி பூங்காவில் சில்மிஷத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 15 காதல் ஜோடிகளை காவல்துறை வாகனத்தில் ஏற்றி போலீசார் காவல் நிலையம்அழைத்துச் சென்றனர்.


மதுரையில் உள்ள ராஜாஜி பூங்காவில் காதல் ஜோடிகள் ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டுக் கொள்வதாகவும், சிலர் ஆடைகளை விளக்கி தாகத செயலில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. சிறுவர்கள் வந்து செல்லும் பூங்காவில் சில சமயம் காதல் ஜோடிகள் படுக்கை அறையாக மாற்றுவதாகவும் கூறப்பட்டது.

 

கடந்த ஞாயிறன்று கூட்டம் அதிகமாக இருந்தது. பெண்களும் குழந்தைகளும் அதிக அளவில் வந்திருந்தனர். அப்போது பூங்காவுக்கு வந்திருந்த காதல் ஜோடிகள் இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் சென்றது. விரைந்து வந்த போலீசார் சில்மிஷத்தில் ஈடுபடுபவர்களை முதலில் கண்காணித்தனர். பின்னர் அவர்கள் அருகில் சென்று தங்களுடன் வருமாறு அழைத்துச் சென்றனர். இப்படி 15 காதல் ஜோடிகளை பிடித்து காவல் வாகனத்தில் ஏற்றினர்.

 

பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காதல் ஜோடிகளின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த பெற்றோர் காவல் நிலையத்தில் வைத்தே தங்கள் மகனையும், மகளையும் வெளுத்து எடுத்தர்.

 

இனி பூங்கா பக்கம் ஜோடியாக பார்த்தால் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறி சிறையில் தள்ள நேரிடும் என்று எச்சரித்து பெற்றோருடன் காதல் ஜோடிகளை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.